Monday, December 20, 2010

நீது சந்திரா பேட்டி

“எனக்கு எங்கெல்லாம் நல்ல ஸ்கிர்ப்ட் கிடைக்குதோ அந்த மொழிகள்ல நான் நடிப்பேன். குறிப்பாக எனக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு. இங்கேதான் அருமையான ஸ்கிரிப்ட்களை எடுக்கிறாங்க. புதுப்புது முயற்சிகள் நடக்குது. நல்ல டெக்னீஷியன்கள் இருக்காங்க. கதாபாத்திரங்களை அழகாக காட்டுறாங்க.” என்கிறார் ’பாலிவுட்டின் செக்ஸி சைரன்’ நீது சந்திரா. ‘யாவரும் நலம்’ படத்தில் ஹோம்லியாகவும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளையில்’ கதகதப்பாகவும் கிறங்கடித்த அதே ஸ்லிம் ப்யூட்டிதான். ‘யுத்தம் செய்’ படத்தில் இயக்குநர் அமீருடன் கலக்கல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவரிடம் பேசிய போதுதான் இப்படி நம்ம தமிழ் சினிமாவை புகழ்ந்து தள்ளினார்.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை இப்படி புகழ்ந்து தள்ளிறீங்களே. வழக்கம் போல தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் இங்கேயே செட்டிலாகிடுவீங்களா?

(ஹா..ஹா.. ஹா..)அழகாய் வாய்விட்டுயே சிரித்தபடி, “ஏன் கூடாது. சென்னையில ஒரு வீடு வாங்கணும்னு ஆசை புதுசா வந்திருக்கு. இன்னொன்னு தெரியுமா? என்னைப் பார்க்கிறவங்க எல்லோருமே, ‘நீங்க சென்னையா?’ன்னுதான் கேட்கிறாங்க. நானும் சந்தோஷமாக ‘ஆமாம்’னு தலையாட்டிடுவேன். அந்தளவுக்கு சென்னை எனக்கு செட்டாகிடுச்சு.”

உங்ககிட்ட ரொம்ப உஷாராக இருக்கணும்னு பாலிவுட்டுல சொல்றாங்களே. அப்படீன்னா தற்காப்புக் கலையான ‘டேக்வ்ண்டோ’வுல நீங்க பிளாக் பெல்ட் வாங்கினது உண்மைதானா?

“உண்மைதான். சரியான் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். எனக்கு ஆக்ஷன்னா ரொம்ப பிடிக்கும்.”

இப்படி மிரட்டுறீங்களே, அப்படியொரு சந்தர்ப்பம் அமைஞ்சு சண்டை போடுற காட்சி வந்தால் எந்த ஹீரோ கூட சண்டைப் போட ஆசை?

“விக்ரம். அவர் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் சூப்பராக சண்டை போட்டுகிட்டே இருக்கார். நல்ல ஆக்ஷன் ஹீரோ. சூப்பர் நடிகரும் கூட. வாய்ப்பு அமைஞ்சா விக்ரமை ஒரு கைப் பார்த்துட வேண்டியதுதான்.”

பாலிவுட் டிக்ஷ்னரியில நீது சந்திரான்னா ’கான்ட்ரோவெர்ஸி சந்திரா’ன்னு தான் சொல்றாங்களே. கான்ட்ரோவெர்ஸிக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பொருத்தம்?

“அது ஏன்னு எனக்கு இன்னைக்குவரைக்கும் தெரியல. ஆனால் என்னை ‘கான்ட்ரோவெர்ஸி கிட்’னுதான் அங்கே கூப்பிடுறாங்க. சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் சினிமா இன் டஸ்ட்ரியோடு கலந்த சமாச்சாரங்கள். அதனால் நான் எதையும் கண்டுக்கிறது இல்ல. ஆனால் என்னைதான் அதிகம் குறி வைக்கிறாங்க. என்ன பண்றது.”

ஒரு பிரபல இதழுக்காக பிகினியில் மற்றொரு மாடலுடன் கொஞ்சம் நெருக்கமாக போஸ் கொடுத்து இந்தியாவையே சூடாக்கினீங்களே. எங்கே இருந்து வருது இந்த தைரியம்.?

“நான் ஒரு நடிகை. நட்சத்திரங்கள் ஹிப்பொகிராட்ஸ் தான். எல்லோருமே ஹாலிவுட் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்படுறாங்க. இந்தியாவுல இருந்து போனால் ஹாலிவுட் படங்கள்ல புடவையிலும், சுரிதாரிலும்தான் நடிக்கச் சொல்வாங்களா என்ன? ஹாலிவுட் படங்கள்னு வந்தால் உங்களை ஒரு நடிகையாகதான் பார்ப்பாங்க. இந்திய நடிகையா இல்ல எங்கேயிருந்து வந்திருக்கீங்கன்னு யோசிக்க மாட்டாங்க. இவ்வளவுக்கும் நான் ஒரு பெண்ணோடுதான் போஸ் பண்ணினேன். அந்தப் பெண்ணை நான் தொடாமல் தான் இருப்பேன். என்னுடைய எக்ஸ்பிரஷன்னைதான் காட்டியிருப்பேன். ஹிந்தியில நான் நடிச்ச ‘டிராஃபிக் சிக்னல்’ படத்தைப் பார்த்திருக்கீங்களா? அதுல அவ்வளவு கருப்பா, ரோட்டோரமாக சிக்னல்கள்ல நின்னு நடிச்சிருப்பேன். அதைப் பார்த்து அது நான் தானான்னு ஆச்சர்யப்படுவீங்க. இப்படி விதவிதமாக வித்தியாசம் காட்டினால்தானே நடிகை. இன்னைக்கு பெரும்பாலான பேர் லேப் டாப்ல பிகினி இருக்கிற பெண்ணோட படத்தைதான் ஸ்கிரீன்ல வைச்சிருக்காங்க. அப்புறம் ஏன் என்னை மட்டும் குறி வைக்கிறீங்க?”

‘அவதார்’ புகழ் ஜேம்ஸ் க்மெரூன் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சா, அந்தப் படத்துல நிர்வாணமாக ஓடவும் நான் ரெடின்னு ஒரு பத்திரிகை பேட்டியில வெளிப்படையாக சொல்லியிருக்கீங்களே.“ஐயோ அது உண்மையில்ல. ஜேம்ஸ் க்மெரூன் படத்துல நடிக்க ஆசையான்னு கேட்டாங்க. அதுக்கு நான் ’ஆமா அவரோட படம்னா யார்தான் வேண்டாம்னு சொல்ல்வாங்க’னு சொன்னேன். உடனே ’அவரோட பெரிய படங்களில் ஹீரோயினை நிர்வாணமாக ஷூட் பண்ணுவாரே’ திரும்ப கேட்டாங்க. அதுக்கு ‘முதல்ல வாய்ப்பு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்னு சொன்னதைதான் இப்படி எழுதிட்டாங்க. ஜேம்ஸ் க்மெரூன் இல்ல கடவுளே படமெடுத்தாலும் நான் நிர்வாணமாக நடிக்க மாட்டேன்.”

No comments: